கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில், டி.என்.சி.எஸ்.சி.,க்கு இணையான ஊதியம், தனித்துறை, பொட்டலமுறை, ஓய்வூதியம், பணிவரன்முறை, மருத்துவப்படி ரூ.300 உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கள்ளக்குறிச்சியில் நடந்த மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆண்கள் கருப்பு சட்டை அணிந்தும், பெண்கள் கருப்பு சேலை அணிந்தும் பங்கேற்றனர்.
இதில், சங்க தலைவர் ஜெகதீஸ்வரி, செயலாளர் பெருமாள், பொருளாளர் கிருஷ்ணசாமி, துணை தலைவர்கள் பரசுரமாமன், வேல்முருகன், இணை செயலாளர்கள் ஏழுமலை, அமலா அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், மகளிர் அணி செயலாளர் லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE