பழநி: கொடைக்கானல், பழநிமலைப் பகுதியில் சிலநாட்களாக மழை பெய்துவருவதால் அணைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயரத் துவங்கியுள்ளது.
பழநி, ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயம், குடிநீர், நிலத்தடிநீர்மட்டத்திற்கு ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு, வரமாநதிஅணை, குதிரையாறு ஆகிய மூன்று அணைகள் உள்ளன. சிலநாட்களாக கொடைக்கானல், பழநி மலைப்பகுதியில் மழைபெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்மட்டமும் உயர்ந்துவருகிறது.இரண்டாவது முறை நிரம்பும்குறிப்பாக வரதமாநதி அணை நீர்மட்டம் 64.31அடி (மொத்தம் 66.47அடி) ஆக உள்ளது. கனமழை பெய்தால் இரண்டாவது முறையாக நிரம்பி வழிய வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் கூறினர்.
நேற்றைய நிலவரம்பாலாறு-பொருந்தலாறு அணைக்கு வினாடிக்கு 61கனஅடி நீர்வரத்து உள்ளது. 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 53அடி (மொத்தம் 65அடி) உள்ளது. வரதமாநதி அணைக்கு வினாடிக்கு 96கனஅடி நீர்வரத்துள்ளது. 40கனஅடி வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 64.31அடி(மொத்தம் 66.47அடி) உள்ளது.குதிரையாறு அணைக்கு வினாடிக்கு 20 கனஅடி வருவது, அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 62அடி (மொத்தம் 80அடி) உள்ளது. பரப்பலாறு அணைக்கு வினாடிக்கு 64கனஅடி தண்ணீர்வருகிறது. வெளியேற்றம் இல்லை, நீர்மட்டம் 54.78 (மொத்தம் 90அடி) உள்ளது.