ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் துாய்மை காவலர்களுக்கு புதிய தள்ளுவண்டி வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது.
கிராமபுறங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது இந்த திட்டத்தின் நோக்கம்.இதற்காக 150 வீட்டிற்கு ஒரு துாய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு டிரை சைக்கிள், கொக்கி, மண்வெட்டி உள்ளிட்ட குப்பை சேகரிப்பதற்கான உபகரணங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டன.இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட டிரை சைக்கிள் துரு பிடித்து பழுதாகிய நிலையில் உள்ளதால் ஊரக வளர்ச்சி துறை மூலம் புதிய மாடலில் தள்ளு வண்டிகள் துாய்மை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.