வேடசந்துார்: வேடசந்துார் டீக்கடையில் லாட்டரி சீட்டு விற்ற 2பேர் கைது செய்யப்பட்டனர்.வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் டீக்கடை நடத்தி வருபவர் சதீஷ் 42. இவர் சதாம் உசேன் 26, என்ற வாலிபரை வைத்து, லாட்டரி சீட்டு விற்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை நடத்தியதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், ரூ.10,000 பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் சதீஷ் மற்றும் சதாம் உசேன் கைது செய்யப்பட்டனர்.
Advertisement