அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும், இந்தாண்டும், 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, இம்மாதம், 26ம் தேதி,
 ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு

சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும், இந்தாண்டும், 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, இம்மாதம், 26ம் தேதி, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.மறுநாளே திட்டத்தை செயல்படுத்த, 2,363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கவும், அரசு முடிவு செய்தது.

அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் துவக்க விழா, நேற்று காலை, தலைமை செயலகத்தில் நடந்தது. விழாவில், 16 குடும்பங்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை, முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார்.பரிசு தொகுப்பில், 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை இடம் பெற்றுள்ளன.

இலவச வேட்டி, சேலை திட்டத்தின் கீழ், 2020ல், 484.25 கோடி ரூபாய் செலவில், 1.67 கோடி வேட்டிகள்; 1.67 கோடி சேலைகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தை துவக்கி வைத்து, 16 குடும்பங்களுக்கு, இலவச வேட்டி, சேலைகளை, முதல்வர் வழங்கினார்.இவ்விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் சண்முகம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தோரண வாயில்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நடந்ததையொட்டி, தலைமை செயலக நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்லும் வாயிலில், வாழை மரங்கள், கரும்பு, மலர் மாலை ஆகியவற்றால் தோரண வாயில் அமைக்கப் பட்டிருந்தது. பொங்கல் பரிசு தொகுப்பு பை மீது, ஜெயலலிதா மற்றும் முதல்வர் இ.பி.எஸ்., படம் அச்சிடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜன-202011:24:40 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடிமட்ட ஏழைகளுக்கே தரவேண்டும் திரு EPS அவர்களே தெரியுமா தேவையானாவாலுக்குகிடைக்காமல் வசதியுள்ள வனுக்கு தருவதுமகாகேவலம் உண்மையிலேயே அடுத்தவேளை சோற்றுக்கும் வழியில்லேன்னு தவிக்கும் நபர்களுக்குவழங்கினாள் வயறு வாழ்த்தும். இருப்பவனுக்கெல்லாம் என்னாத்துக்குங்க இலவசம் .PLEASE THINK நாங்கள் பலகாலமா ரேஷன் கார்டுவச்சுக்கவேயில்லீங்க காரணம் எதுவும் வாங்காமல் அவைகல்கருப்புலே விற்க வேண்டாம் என்ற நல்ல எண்ணம் தான் கெரோசின் உபயோகமே இல்லே எங்களுக்கெல்லாம் வசதி அல்லவா சுடுநீருக்கு போரிலே மின்சாரமலே யூஸ் பண்றங்க கிராமங்களில் குப்பைசேத்தை இள்நீர்மட்டைகளைகாயவெச்சும் அடுப்பில் வச்சு ஆண்டாள் வெந்நீர்ப்போடும்வழக்கம் இன்றும்பளக்கிராமங்களிலே இருக்கு என்பதும் உண்மை பிஜேபி யின் உபயம் பலரும் காஸ் அடுப்புயூஸ்பென்ரங்க பரம ஏழைகள் குடிசைலேவாழும்நாபர்கள் உழைப்பாளிகள் எல்லோரும் இன்னம் விறகு சுள்ளிகளேதான் யூஸ் பண்ணுறாங்க ஏழையோ மனக்காரனோ பசி IS காமன் இருப்பாவாலுக்கு எதுக்கு ரேஷன் லே பிரீ ஆகா அரிசியெல்லாம் தாறீங்க எல்லாம் எல்லாம் ப்ளாஆக்லேட்தான் விக்குறானுக பிரீ அரிசி மழிவுப்பொருட்களெல்லாம் தேவையானாவாலுக்குப்போறது இல்லீங்க இது 100% உண்மைதானுங்கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X