பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் தொடர் மழை:

Added : டிச 01, 2019
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கள்ளக்குறிச்சி விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கோமுகி, மணிமுக்தா அணைகளை நம்பி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதிகள் பெறுகிறது.அதேபோல், ஏரி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கள்ளக்குறிச்சி விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

கோமுகி, மணிமுக்தா அணைகளை நம்பி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதிகள் பெறுகிறது.அதேபோல், ஏரி பாசனத்தை நம்பியும் பயிரிடப்படுகிறது. இங்கு கரும்பு, நெல், மக்காசோளம், மஞ்சள், மரவள்ளி உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கடும் வறட்சியில் விவசாய நிலங்களில் தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்தது. நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் குறைந்ததால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது.
தண்ணீர் பஞ்சத்தால் பொது மக்கள், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.இதனால், பருவ மழையை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது வடக்கிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், அணைகள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.கோமுகி அணையின் மொத்த கொள்ளளவான 46 அடியில் தற்போது 44 அடிக்கு தண்ணீர் உள்ளது.

அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து உள்ளதால், பாதுகாப்பு கருதி வரத்து நீர் முழுவதும் அணையிலிருந்து ஆறு வழியாக வெளியேற்றப்படுகிறது.இதனால், கோமுகி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும் சூழ்நிலையால், தடுப்பணைகள் மூலம் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.மணிமுக்தா அணையில் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை நீர் மட்டுமே தேங்குவதால், தற்போது 25 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கிறது.தொடர் மழையால், அணைகள், ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X