சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி, தஞ்சை, புதுகையில் தொடர்மழைக்கு 3 பேர் பலி

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019
Advertisement
 திருச்சி, தஞ்சை, புதுகையில் தொடர்மழைக்கு 3 பேர் பலி


திருச்சி, தஞ்சை, அரியலுார் மற்றும் புதுகை மாவட்டங்களில், தொடர் மழைக்கு, பெண் உட்பட மூன்று பேர் பலியாகினர்.

திருச்சி, தஞ்சை, அரியலுார், பெரம்பலுார் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், இரண்டு நாட்களாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அரியலுார் மாவட்டம், முனியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர், பூங்கோதை, 40. மாற்றுத் திறனாளியான இவர், திருமணம் ஆகாததால், தனியாக வசித்து வந்தார். நேற்று காலை, மழை பெய்தபோது, குடை பிடித்தபடி, வீட்டை ஒட்டிய சந்து வழியாக, பூங்கோதை நடந்து சென்றார். செல்லக்கண்ணு என்பவரது பழைய ஓட்டு வீட்டருகே சென்ற போது, 15 அடி உயரமுள்ள சுவர் இடிந்து விழுந்தது. இதில் பூங்கோதை, இடிபாடுகளில் சிக்கி இறந்தார். தஞ்சாவூர்தஞ்சை மாவட்டம் முழு வதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. மெலட்டூர், மூன்றாம்சேத்தியைச் சேர்ந்த துரைகண்ணு, 70, என்பவர், தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று அதிகாலை, ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், துரைகண்ணு இறந்தார்.நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, வல்லத்தில் அதிகபட்சமாக, 10 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது. 36 கடலோர கிராமங்களில் இருந்தும், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டத்திலும், இரண்டு நாட்களாக, தொடர் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் -- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முள்ளூர் கிராமத்தை, காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. முள்ளூர் கிராம மக்கள், கால்நடைகளுடன், தஞ்சை - - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினர் சமாதானப்படுத்தியதால், மறியல் கைவிடப்பட்டது.பைக்கில் சென்றவர் பலிபுதுக்கோட்டையைச் சேர்ந்த கந்தசாமி, 50, என்பவர், நேற்று காலை, 11.00 மணிக்கு, பைக்கில் கடைவீதிக்கு சென்றார். அப்போது, சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதில், பைக் சிக்கியது. பைக்கில் இருந்து மழை நீரில் விழுந்த கந்தசாமி, வலிப்பு வந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருச்சி திருச்சி மாவட்டம் முழுவதும், இரண்டு நாட்களாக, இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று பகல் நேரத்திலும், தொடர்ந்து மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் மழைநீர் தேங்கியது.ராமநாதபுரம்ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில், கொட்டி தீர்த்த மழையால் ஊரணிகள், குளங்கள் நிரம்பின. மாவட்டத்தில் அதிக அளவாக, ராமநாதபுரத்தில், 11 செ.மீ., மழை பதிவானது. கனமழையால், ராமநாதபுரத்தில், 10 மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. பேராவூர் பகுதியில் முனியம்மாள் என்பவர் வீடு இடிந்தது; யாருக்கும் பாதிப்பில்லை.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை துவங்கிய மழை, இரவிலும் தொடர்ந்தது. நேற்று பகலிலும் அடைமழை பெய்தது. திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி விட்டன.பாபநாசம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணிக்கு, 14 ஆயிரத்து, 270 கன அடி வீதம் நீர் வந்தது. அணைக்கு வரும் நீர், அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.இதனால், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி என, தாமிரபரணி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு நீர் சென்றது. ஆற்றுப் பாலங்களில் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலை, நீர் சூழ்ந்தது. கன மழையால், 10 மாவட்டங்களில், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால், தொடர்ந்து மழை பெய்தும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை. இதனால், குழந்தைகள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில், கொட்டி தீர்த்த மழையால் ஊரணிகள், குளங்கள் நிரம்பின. மாவட்டத்தில் அதிக அளவாக, ராமநாதபுரத்தில், 11 செ.மீ., மழை பதிவானது. கனமழையால், ராமநாதபுரத்தில், 10 மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. பேராவூர் பகுதியில் முனியம்மாள் என்பவர் வீடு இடிந்தது; யாருக்கும் பாதிப்பில்லை.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X