சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பிரமுகர் குடோனில் ரூ.27.59 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

Added : டிச 01, 2019
Share
Advertisement
ஆத்துார்:சேலம், வீரகனுாரில், அ.தி.மு.க., பிரமுகரின் குடோனில், பதுக்கி வைத்திருந்த, 27.59 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை, போலீசார் பறிமுதல் செய்து, ராஜஸ்தானைச் சேர்ந்த சகோதரர்களை கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, வீரகனுார், ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட பிரதிநிதி குமாரசாமி, 45. இவரது, விவசாய தோட்டத்தில் உள்ள குடோனில், நேற்று
 அ.தி.மு.க., பிரமுகர் குடோனில் ரூ.27.59 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

ஆத்துார்:சேலம், வீரகனுாரில், அ.தி.மு.க., பிரமுகரின் குடோனில், பதுக்கி வைத்திருந்த, 27.59 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை, போலீசார் பறிமுதல் செய்து, ராஜஸ்தானைச் சேர்ந்த சகோதரர்களை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, வீரகனுார், ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட பிரதிநிதி குமாரசாமி, 45. இவரது, விவசாய தோட்டத்தில் உள்ள குடோனில், நேற்று முன்தினம் இரவு, ஆத்துார் போலீசார் சோதனை நடத்தினர்.அங்கு, 27.59 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 113 மூட்டை ஹான்ஸ், 70 பெட்டிகளில் இருந்த பான்மசாலா, 175 கிராம் வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா கடத்த லுக்கு பயன்படுத்திய,எய்ஷர் மினி லாரி, மாருதி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, ஜமத்துாராம், 34, அவரது தம்பி அஜராம், 26, ஆகியோரை கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'ராஜஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள், மளிகை பொருட்கள் வைக்க இடம் வேண்டும் என, மாதம், 3,000 ரூபாய்க்கு, குடோனை வாடகைக்கு எடுத்துள்ளனர். 'பெங்களூரு, யஷ்வந்த்பூர் பகுதியில் இருந்து குட்கா கொள்முதல் செய்து, தமிழக குட்கா வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர்' என்றனர்.அ.தி.மு.க., பிரமுகர் குமாரசாமியிடமும், விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X