சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை மிரட்டி வீடியோ: 4 பேர் கைது

Added : டிச 01, 2019
Advertisement

கோவை:கோவையில், பிளஸ் 1 மாணவியை மிரட்டி, ஆபாச, 'வீடியோ' எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்; தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

கோவையை சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 17 வயது மாணவி, நவ., 26ல், வாலிபர் ஒருவருடன், சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள பூங்காவில் இருந்து, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.ஆறு பேர் கும்பல், இருவரையும் வழிமறித்து, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று, மிரட்டி, ஆடைகளை அகற்றி, 'வீடியோ' பதிவு செய்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மாணவி, பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், அனைத்து மகளிர் மேற்கு பகுதி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து, சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த, 21 - 30 வயதுள்ள நான்கு ஆண்களை, நேற்று கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.
சிறுமி கர்ப்பம்
தஞ்சை அடுத்த கரந்தையைச் சேர்ந்த, 15 வயது சிறுமிக்கும், திருவையாறு அடுத்த ஆவிக்கரையைச் சேர்ந்த பிரபாகரன், 35, என்பவருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தற்போது, சிறுமி, ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளார். தகவலறிந்த, தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் சுகந்தவல்லி, திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் 'போக்சோ' சட்டத்தில், சிறுமியின் பெற்றோர் மற்றும் பிரபாகரன் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X