சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தைக்கு பாடம்: மகன் தற்கொலை

Added : டிச 01, 2019
Advertisement

கோவை:தந்தை கண்டித்ததால், 10ம் வகுப்பு மாணவன், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை, கணபதி, லெனின் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தீஸ்வரன். இவரது மகன் அபினேஷ்வர், 15. தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, டியூசன் சென்ற மகனை அழைத்து வர, மூர்த்தீஸ்வரன் சென்றார்.அப்போது, சமூக அறிவியல் பாட தேர்வு விடைத்தாளில் கையெழுத்து போடுமாறு, தந்தையிடம் மாணவன் கேட்க, மதிப்பெண் குறைந்ததால், கையெழுத்து போட தந்தை மறுத்து, வீட்டுக்கு நடந்தே வருமாறு சொல்லி, சென்றுள்ளார்.நீண்ட நேரமாகியும், மாணவன் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, வடகோவை - பீளமேடு இடையே தண்டவாளத்தில், ரயிலில் அடிபட்டு, ஒருவர் சடலமாக கிடப்பதாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.விசாரணையில், பலியானது அபினேஷ்வர் என்பதும், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. தகவல்அறிந்த மாணவனின் பெற்றோர், சடலத்தை கண்டு கதறி அழுதனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X