பெரியாறு அணைக்கு அதிகரித்தது நீர்வரத்து | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணைக்கு அதிகரித்தது நீர்வரத்து

Added : டிச 01, 2019

கூடலுார்:பெரியாறு அணையில் பெய்துவரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது.நேற்று முன்தினம் இரவு நீர்பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 761 கன அடியில் இருந்து 842 கன அடியாக அதிகரித்துள்ளது. பெரியாறில் 12.4, தேக்கடியில் 14.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக 1600 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4180 மில்லியன் கன அடியாகும். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 127.60 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X