பொது செய்தி

தமிழ்நாடு

கோத்தபயா வாக்குறுதி கண்துடைப்பு

Added : டிச 01, 2019
Advertisement

ராமேஸ்வரம்:'தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபயா அளித்த வாக்குறுதி கண்துடைப்பு நாடகம்' என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
2015 பிப்.27 முதல் 2018 ஜன.9 வரை பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்களின் 185 விசைப் படகுகள், நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இதில் கடந்த ஆண்டு ஜூலை 25ல் இலங்கை அரசு விடுவித்த 42 படகுகளில் 34ஐ மட்டும் தமிழக மீனவர்கள் மீட்டு வந்தனர்.இலங்கை அரசின் புதிய சட்டத்தின்படி 5.5.18 முதல் 9.11.19 வரை 41 படகுகளை இலங்கை சிறை பிடித்தது. இதில் 28 படகுகளை அரசுடைமை ஆக்கியது. 7 படகுகள் குறித்து தமிழக மீனவர்கள் வழக்கு நடத்துகின்றனர். மேலும் இலங்கை நீதிமன்றம் விடுவித்த 6 விசைப்படகுகள், நாட்டுப் படகுகளை கொடுக்க இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் டில்லி வந்த இலங்கை அதிபர் கோத்தபயா, 'தமிழக படகுகள் விடுவிக்கப்படும்' என்றார். தற்போது இலங்கை வசமுள்ள 192 படகுகளில் 90 சதவீதம் சேதமடைந்துள்ளன.இதுகுறித்து இந்திய, இலங்கை நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பு பிரதிநிதி யூ.அருளானந்தம் கூறுகையில், ''இலங்கை வசமுள்ள படகுகளை பராமரிக்காமல் விட்டு விட்டனர். அவற்றில் 20 படகுகளை கூட பயன்படுத்த முடியாது. தமிழக மீனவர்களை நசுக்க முடிவு செய்த நிலையில் படகுகள் விடுவிப்பு என்பது கண்துடைப்பு நாடகம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X