காட்டெருமைகள் விரட்டியதால் ஓட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டெருமைகள் விரட்டியதால் ஓட்டம்

Added : டிச 01, 2019

குன்னுார்:குன்னுார் கரோலினா பகுதியில், காட்டெருமைகள் விரட்டுவதால் பள்ளி மாணவ, மாணவியர் செல்ல அச்சப்படுகின்றனர்.குன்னுார் கரோலினா, கரிமொரஹட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். இங்கு காலை, இரவு நேரத்தில் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளி நேரத்தில் இயக்காததால், மாணவ, மாணவியர், 3 கி.மீ., துாரத்திற்கு மேல், நடந்தே சென்று வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில், வீடுகளுக்கு சென்று கொண்டிருந்த பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரை காட்டெருமைகள் விரட்டியது.அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இதில் காயமடைந்த, தீபா, 30, ரஞ்சினி, 41, ஆகியோர், குன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.தகவலின்பேரில், குன்னுார் வனச்சரகர் (பொ) சரவணன் உத்தரவின் பேரில், வனவர் ராஜ்குமார் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு செய்து காட்டெருமைகளை விரட்டி, கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வழியாக செல்பவர்களை, காட்டெருமைகள் விரட்டுவதால் மக்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்துள்ளனர். எனவே, பள்ளி நேரங்களில் அரசு பஸ்சை இயக்க வேண்டியது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X