களமிறங்குவாரா கலெக்டர் ண ஆண்டுகள் பல கடந்தும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் ண போக்குவரத்து நெருக்கடியால் தினம் தத்தளிக்கும் மக்கள்

Added : டிச 01, 2019
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக முழுஅளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் போக்குவரத்து நெருக்கடியால் தினமும் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.மாவட்டத்தில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, மதுரை-நாகர்கோயில் நான்கு வழிச்சாலை, ஸ்ரீவில்லிபுத்துார்-பார்த்திபனுார் மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இவற்றின் வழியாக தினமும் பல ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. நகரங்களுக்கு வெளிப்பகுதியில் எளிதாக பயணிக்கும் நிலை இருந்தாலும் நகரில் எளிதாக வந்து செல்லமுடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.இதிலும் நகராட்சி எல்லைக்குள் கடைகள் 4 அடி அகலம் மட்டும் இருக்கும்நிலையில் ஆக்கிரமிப்புகள் 10 அடி வரை நீட்டிக்கபடுகிறது. டீக்கடைகள், ஒர்க் ஷாப்புகள், ரோட்டோர வியாபாரிகள் ஆகியோர் ரோட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து கொண்டிருப்பதால் ஆம்புலன்ஸ்கள் கூட வரமுடியவில்லை. இதிலும் வணிகநிறுவனங்கள் பல கழிவுநீர் வாறுகால்கள் மீது கடைகள் அமைத்து விடுவதால் மக்கள் நடந்து செல்லகூட முடியாத அளவிற்கு சிரமம் உள்ளது.ஸ்ரீவில்லிபுத்துாரில் கடந்த 10 ஆண்டுகளாக முழு அளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் அரசு பஸ் டிப்போ முதல் பெரியகுளம் கண்மாய் வரை, பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுபகுதிகள், ஆண்டாள் கோயில் வரை கடைகளை போட்டி போட்டு நீட்டித்து மக்கள் நடக்க செல்ல இயலாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் நடவடிக்கை அவசியமாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X