ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 மி.மீ., கன மழையால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.ராமேஸ்வரம், ராமநாதபுரத்தில் கொட்டி தீர்த்த மழையால் ஊரணிகள், குளங்கள் நிரம்பின. மாவட்டத்தில் அதிக அளவாக ராமநாதபுரத்தில் 110 மி.மீ., பதிவானது. கனமழையால் ராமநாதபுரத்தில் பத்து மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. பேராவூர் பகுதியில் முனியம்மாள் என்பவர் வீடு இடிந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் பாதிப்பில்லை. ஊரணிகள், சிறு கண்மாய்கள் நிறைந்துள்ளன. ஆனால், பொதுப்பணித்துறையின் 499 கண்மாய்களில் ஒன்று கூட நிறையவில்லை.