கோத்தகிரி:கோத்தகிரி பெத்தளா ஹெத்தையம்மன் கோயில் பூசாரிகள் நியமனம் தொடர்பாக, சப்--கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் அமைதி பேச்சு நடந்தது. அதில், இரு தரப்பிலும் தலா, ஐந்து பேர் பங்கேற்றனர்.இருதரப்பினரிடம் தனித்தனியாக பேச்சு நடத்திய அதிகாரிகள், பிறப்பித்த உத்தரவு விபரம்:கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் ஹைத்தையம்மன் கோவில் பூசாரிகளாக இருந்த கிருஷ்ணன், நந்தி மற்றும் அபிஷேக் ஆகிய மூவரையும், (இன்று) 1ம் தேதிக்குள் கோவில் வளாகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்; ஏற்கனவே, கடந்த நவ., 29ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நியமனம் செய்யப்பட்ட பிரபு, போஜன் மற்றும் ரேனேஷ் ஆகியோரை கோவில் பூசாரிகளாக நியமிக்க வேண்டும்; கோவில் வரவு செலவு கணக்குகளை பராமரித்து வரும், 'ஏ' பிரிவினர், இன்று (1ம் தேதி) பெட்டட்டி சுங்கம் மைதானத்தில் நடைபெறும் ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் ஒப்படைக்க வேண்டும்;ஹைத்தையம்மன் கோவில் திருவிழா முடிந்த பின்பு, இரண்டு மாதத்திற்குள், 18 ஊர் பஞ்சாயத்தார் ஒன்று கூடி, கோவில் நிர்வாகத்தை கவனிக்க, ஒரு அறக்கட்டளை உருவாக்க வேண்டும்; இதில், ஏ பிரிவை சேர்ந்த நபர்களையும் பிரதிநிதிகளாக சேர்க்கவேண்டும்;கோவில் பிரச்னை தொடர்பாக, 'ஏ' மற்றும் 'பி' பிரிவினர் இந்த உத்தரவை பின்பற்றாமல் சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்பட்டால், சட்டரீதியான நடவடிக்கை மேற்கெள்ளப்படும் என்பன உட்பட சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE