சாத்துார்: சாத்துார் அருகே சிறுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர் ராஜ்குமார் தலைமை வகித்தார். உப்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். அமிர்தா பவுண்டேசன் நிறுவனர் உமையலிங்கம், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை முகாமை தொடங்கி வைத்தனர்.நென்மேனி மருத்துவ அலுவலர் அனிதா பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், பி.டி.ஓ., ராமமூர்த்தி வாழ்த்தி பேசினார். கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் சார்பில் கண்காட்சி நடந்தது.