பொது செய்தி

தமிழ்நாடு

மழலையர் பள்ளி ஆண்டு விழா

Added : டிச 01, 2019
Advertisement

ஊட்டி,:ஊட்டி கிரசன்ட் மழையர் பள்ளி ஆண்டு விழாவில், குழந்தைகள் அரங்கேற்றிய தெனாலிராமன் நாடகம் பார்வையாளர்களை கவர்ந்தது.ஊட்டி, கிரசன்ட் பள்ளி ஆண்டு விழா, அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் சுந்தரம்பாள் பேசுகையில், ''இன்றைய சூழலில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே போல், மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளுடன், விளையாட்டில் சிறந்து விளங்கினால் மட்டுமே பல்வேறு சாதனைகளை புரிய முடியும். இங்கு அரங்கேறிய குழந்தைகளின் நாடகம் சிறப்பாக இருந்தது,''என்றார்.தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், குழந்தைகளின் தெனாலிராமன் நாடகம் பார்வையாளர்களை கவர்ந்தது. ஆர்.டி.ஓ., சுரேஷ் பங்கேற்று போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியின், ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் உமர் பரூக் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X