பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் கன மழை அறிவிப்பு குன்னுார் மக்கள் திக்... திக்...

Added : டிச 01, 2019
Share
Advertisement
குன்னுார்;குன்னுாரில் மீண்டும் மழை துவங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைத்து அனைத்து துறை அலுவலர்களும் 'அலர்ட்'டாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குன்னுாரில் கடந்த, 17ம் தேதி பெய்த, கன மழையால், கிருஷ்ணாபுரம் சாலையோரத்தில் நிறுத்திய, 19 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலையில், பல இடங்களில்

குன்னுார்;குன்னுாரில் மீண்டும் மழை துவங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைத்து அனைத்து துறை அலுவலர்களும் 'அலர்ட்'டாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குன்னுாரில் கடந்த, 17ம் தேதி பெய்த, கன மழையால், கிருஷ்ணாபுரம் சாலையோரத்தில் நிறுத்திய, 19 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலையில், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வேளாங்கண்ணி நகர், கன்னி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகள் இடிந்து, அந்தரத்தில் உள்ளன.இந்நிலையில், 'நீலகிரியில், 2 நாட்களுக்கு கன மழை தீவிரமடையும்,' என, வானிலை மையம் தெரிவித்தது. நேற்று மாலையிலிருந்து மழை தீவிரம் அடைந்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு துறையின் 'கமாண்டோ' படையினர்; தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.வருவாய் துறையினர் கூறுகையில்,' அவசர கால நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. குன்னுார்--மேட்டுப்பாளையம் சாலையில் நள்ளிரவில் கனமழை தீவிரமடைந்து, மண்சரிவு ஏற்பட்டால், நெடுஞ்சாலை துறையினர், போலீசாரின் அறிவுரையின் பேரில், போக்குவரத்து தடை செய்யப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X