பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச செஸ் போட்டி துவக்கம்

Added : டிச 01, 2019
Advertisement

ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லுாரியில் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் துவங்கின. நான்கு நாட்கள் நடைபெறும் இப்போட்டியை ராம்கோகல்வி குழும முதன்மை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ், மாவட்ட செஸ் கூட்டமைப்பு தலைவர் கோபால்சாமி, தமிழ்நாடு செஸ் கூட்டமைப்பின் செயலாளர்விஜயராகவன் குத்துவிளக்கேற்றி துவக்கினர். கல்லுாரி முதல்வர் கணேசன் வரவேற்றார். துணைமுதல்வர் ராஜகருணாகரன், துணை பொது மேலாளர் செல்வராஜ் மற்றும் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் 380க்கும் மேற்பட்ட முன்னணி செஸ் வீரர்களும், கிராண்ட் மாஸ்டர்கள்மற்றும் சர்வதேச மாஸ்டர்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சர்வதேச செஸ் போட்டி நடுவர் அனந்தராம் தலைமையிலானகுழுவுடன் இணைந்து ராம்கோ கல்லூரி உடற்கல்வி இயக்குனர் வீரமணி மற்றும் பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X