கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திறந்தவெளி கழிப்பிடத்திற்கு முடிவு கட்ட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:'திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதற்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.சிவகாசி அருகே பெரியவாடியூர் திரவியம் தாக்கல் செய்த மனு: பெரியவாடியூரில் களம் மற்றும் பாதையை நான் ஆக்கிரமித்துள்ளதாக சிவகாசி ஆர்.டி.ஓ.,தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினர். விளக்கமளிக்க எனக்கு

மதுரை:'திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதற்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகாசி அருகே பெரியவாடியூர் திரவியம் தாக்கல் செய்த மனு: பெரியவாடியூரில் களம் மற்றும் பாதையை நான் ஆக்கிரமித்துள்ளதாக சிவகாசி ஆர்.டி.ஓ.,தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினர். விளக்கமளிக்க எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. நோட்டீ ைஸ ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு விசாரித்தது.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'மனுதாரர் ஆக்கிரமிக்கவில்லை. ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிடும் புதர் மண்டிய பகுதியை கிராமத்து மக்களில் சிலர் இயற்கை உபாதையை போக்க திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்,' என்றார்.நீதிபதிகள் உத்தரவு: மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பியதில் குறை காண முடியாது. ஆக்கிரமிப்பின் தன்மையை தெளிவுபடுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டால் அதை அகற்ற மனுதாரருக்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். அவர் அகற்றாவிடில், வட்டார வளர்ச்சி அலுவலர் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில், இந்தியாவில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவது தொடர்கிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். வீடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க மாநில அரசு கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்துகிறது. இதை தீவிரமான விவகாரமாகக் கருதி, சம்பந்தப்பட்ட கிராமத்தில் கழிப்பறைகள் அமைத்துக் கொடுக்க விருதுநகர் கலெக்டர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
01-டிச-201921:05:51 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN வர வர கோர்ட் அரசுக்கு ஆலோசனை கூறுவதும் அரசுக்கு எதிர்ப்பா வழக்கு வந்தால் அதை லட்டாக எடுத்து சுவைப்பதுமாக அரசுக்கு ஆலோசனை கூறுவதாக இருப்பது அழகல்ல .மக்களாட்சி என்றால் என்ன என்ற தத்துவமே அடிபட்டு போகிறதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X