பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வெடுத்தால் நோவு வந்திரும்! இது, நஞ்சம்மா பாட்டி வாக்கு

Added : டிச 01, 2019
Advertisement
 ஓய்வெடுத்தால் நோவு வந்திரும்! இது, நஞ்சம்மா பாட்டி வாக்கு

காலையில் லேசான துாறல். இதம் தந்தாலும், மதிய நேர வெயில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தது. தாகத்தை தணிக்கலாம் என தேடியதில், பழரசக் கடைகள் பல கடந்து, ஒரு இளநீர் கடை தென்பட்டது.இளநீர் வேணுங்க என்றதும், அங்கு வந்தவர், 80 வயது பாட்டி. இவரா, இளநீர் வெட்டப்போகிறார் என்ற சிந்தனையை தவிடுபொடியாக்கி, நொடிப்பொழுதில் இரண்டு இளநீரை வெட்டிகையில் தந்தார்.
வயதான காலத்திலும் நஞ்சம்மா பாட்டியை, எது உழைக்க வைக்கிறது என்ற கேள்விக்கு, 'ஓய்வெடுத்தால் நோய் வரும்' என்பதே அவரது பதிலாக இருக்கிறது.அவர், மேலும் பகிர்ந்தவை...கடந்த, 50 ஆண்டுகளாக இளநீர் விற்பனை செய்து வருகிறேன். கணவர் ராமசாமியும், நானும் ஐந்து முக்கு ரோட்டில், 20 ஆண்டுகளாக இளநீர் கடை போட்டிருந்தோம். சாலை விரிவாக்கம் செய்ததால், டவுன்ஹால், கால்நடை மருத்துவமனை அருகில் கடை போட்டோம்; 30 ஆண்டுகள் கடந்து விட்டது.எனக்கு இரண்டு பையன்கள். பேரன், பேத்திகள் இருவருக்கும் திருமணம் ஆயிருச்சு. இருவர் வேலைக்கு செல்கின்றனர். எட்டாண்டுகளுக்கு முன், கணவர் இறந்தபோதே, கடை வேண்டாம்; வீட்டிலேயே இரு என மகன்கள் சொன்னாங்க. பாடுபட்ட கை, ஓஞ்சிருக்க முடியாதுனு சொல்லிட்டேன். இப்போ, பேரன், பேத்திகளும் வீட்டில் இரு என வற்புறுத்துகின்றனர். வேலையில்லாம வீட்டில் படுத்திருந்தா, நோவு வந்துரும். வீம்புக்கு பண்றேன்னு பேசுவாங்க.
ஆனா, நான் நோய்க்கு பயந்துதான் கடை போடுறேன். காலையில, 9:00 மணிக்கு வந்தா, மாலை, 4:00 மணி வரை வியாபாரம் போகும். 50 ஆண்டுகளுக்கு முன், ஒரு இளநீர் விலை, 50 பைசா. இப்போ, ரூ.30 ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கு.முன்னாடி, ஆள்போட்டு இளநீர் விற்போம். ஐஸ் கட்டி போட்ட ஜூஸ், வகை வகையான ஐஸ்கிரீம் சாப்பிடுவதால், இளநீர் குடிக்கறது குறைஞ்சுபோச்சு. கோடை காலத்திலும், ஒரு நாளைக்கு 20பேர் இளநீர் குடிப்பது அதிசயமாச்சு. நானும் என் திறனுக்கு ஏதுவா, அளவா வியாபாரம் செய்றேன். படுக்கையில் விழாம, கடைசி வரை உழைச்சுட்டு இருக்கணும்னுதான் ஆசை, என்கிறார் நஞ்சம்மா பாட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X