சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உளுந்து பயிரில் தண்ணீர் தேங்குவதால் விவசாயிகள் கவலை

Added : டிச 01, 2019
Advertisement
 உளுந்து பயிரில் தண்ணீர் தேங்குவதால் விவசாயிகள் கவலை

தியாகதுருகம் : தியாகதுருகம் பகுதியில் பெய்து வரும் மழையால் உளுந்து பயிரில் தண்ணீர் தேங்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தியாகதுருகம் சுற்றுவட்டார பகுதியில் 8,000 ஏக்கர் பரப்பில் மானாவாரி நிலத்தில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த அக்., மாதம் பெய்த மழை ஈரத்தை கொண்டு விதைப்பு பணிகளை முடித்தனர். அதைத்தொடர்ந்து அவ்வப்போது பெய்த மழையால் செடிகள் செழித்து வளர்ந்துள்ளது.பூச்சிகள் தாக்காத வகையில் மருந்து தெளித்து, களை பறித்து பராமரித்து வருகின்றனர்.தற்போது பூக்கும் பருவத்தில் செடிகள் தழைத்து வளர்ந்துள்ளதால் மகசூல் அதிகரிக்கும் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமாக இப்பகுதியில் பெய்து வருக்கிறது. பரவலாக பெய்த மழையால் உளுந்து வயலில் தண்ணீர் தேங்கியுள்ளது.தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் பல நாட்கள் தண்ணீர் தேங்கினால் செடிகள் அழுகி பாதிக்கப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X