ஈரானை மிரட்டும் காற்று மாசு

Added : டிச 01, 2019
Share
Advertisement
 ஈரானை மிரட்டும் காற்று மாசு

டெஹ்ரான்:ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 'பனிப்புகை' காரணமாக காற்று மாசுபாடு அளவு அதிகரித்தது. காற்று மாசுபாட்டில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் விதமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தலைநகர் டெஹ்ரானில் ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும், இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்கள் மற்றொரு நாளிலும் இயக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் முதியோர் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் தவிர அல்பார்ஜ், எஸ்பஹான் ஆகிய மாகாணங்களிலும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. காற்றில் இருக்கும் துாசியின் அளவு ஒரு கனமீட்டரில் 146 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளது. ஈரானில் காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் 30,௦௦0 பேர் உயிரிழக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X