பொது செய்தி

தமிழ்நாடு

வித்தியாசமான நுண்கலை சிற்பி

Added : டிச 01, 2019
Advertisement
   வித்தியாசமான நுண்கலை சிற்பி

கல்லிலே சிலையும், சொல்லிலே கவியும் வடிப்பதில் கை தேர்ந்தவர்கள் நம் முன்னோர். இக்கலை மரபின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பல இளம் கலைஞர்களை பார்க்க முடிகிறது. அவர்களில் ஒருவரே, துடியலுார் அருகே வடமதுரையில் வசிக்கும் அரவிந்த்குமார். இவர் ஒரு வித்தியாசமான நுண்கலை சிற்பி.இவரிடம் விறகு கட்டை கொடுத்தால், வீணையாக மாற்றித்தரும் ஆற்றல் இருக்கிறது. பேப்பர், பென்சில், சோப்பு, மெழுகு, ரப்பர், மரக்கட்டை, தெர்மாக்கூல் என, எதை கொடுத்தாலும், அழகிய சிற்பமாக மாற்றி அசத்துகிறார். ஓவியம், சிற்பம் மற்றும் நவீன கலைப்பொருட்கள் உருவாக்குவதில், இவரது கற்பனை திறன் வேற லெவல்.பள்ளி ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்காக, இவர் வடிவமைக்கும் பேன்சி டிரெஸ், கார்ட்டூன் உருவங்கள் மற்றும் மினியேச்சர்கள் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன.கோவையில் உள்ள தனியார் பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணியாற்றும் அரவிந்த்குமாரை சந்தித்தபோது...பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஓவியம் மற்றும் சிற்பம் செய்வதில், ஆர்வம் வந்து விட்டது. ஆரம்பத்தில் சோப்பு மற்றும் மெழுகில் சிற்பம் செய்து பழகினேன். பிறகு, பென்சில் டிப்பில் சிற்பம் செய்ய கற்றுக்கொண்டேன்.எந்த மெட்டீரியல் கிடைத்தாலும், கலைப்பொருளாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பள்ளி குழந்தைகளை கவரும் எல்லா விஷயங்களையும் ஓவியமாக, சிற்பமாக, கார்ட்டூன் உருவங்களாக உருவாக்கி விடுவேன். சாலை பாதுகாப்பு குறித்த சுவர் ஓவியங்களை, கோவையில் பல இடங்களில் வரைந்து இருக்கிறேன். ஆர்வத்துடன் இக்கலையை கற்றுக்கொள்ள விரும்பும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறேன்.இதுவரை, 150க்கும் மேற்பட்ட சிற்பங்களை பல்வேறு பொருட்களை கொண்டு செய்து இருக்கிறேன். நான் செய்துள்ள ஓவியம், சிற்பம் மற்றும் கலைப்பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. விரைவில் அதற்கான பணிகளை செய்ய இருக்கிறேன், என, மகிழ்ச்சியாக சிரிக்கிறார் இந்த நுண்கலை சிற்பி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X