பொது செய்தி

தமிழ்நாடு

கண்ணீரை கட்டுப்படுத்தினேன்...

Added : டிச 01, 2019
Advertisement

''வாழ்க்கை துணையாக கரம் பிடித்த கணவர், பாதியிலேயே விட்டு விட்டு போய் விட்டார். அந்த சூழலிலும், என்னை கைவிடாத என் பெற்றோர், உடன்பிறந்த ஊனமுற்ற தம்பி, ஆசை மகள்... இவர்களே இப்போது என் உலகம்...''- கண்ணின் ஓர் ஓரத்தில், நீர் துளிர்க்க சந்தியா அகர்வால் இப்படி கூறியபோது, 'இந்த அழகு சாதனையாளருக்குள் இப்படி ஒரு சோகமா' என, மனது பதறியது.கோவை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் இவர், சந்தியா. சமீபத்தில் மொரீசியஸ் நாட்டில், திருமணமான பெண்களுக்கென நடந்த, 'மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த்' என்ற அழகி போட்டியில் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து, 80 பேர் பங்கேற்ற இப்போட்டி, 11 சுற்றுகளாக நடைபெற்றது. இதில், மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் தமிழ்நாடு, கரீஜியஸ் டைட்டில் மற்றும் பைனலிஸ்ட் என்ற மூன்று பட்டங்களை வென்று, களிப்புடன் திரும்பியுள்ளார்.வாழ்வின் கசப்பான கடந்த காலம்தான், இவரை இப்படி சாதிக்க வைத்துள்ளது. எல்லாவற்றையும் துாக்கி போட்டு விட்டு, அழகாக 'கேட்வாக்' செய்த அந்த தன்னம்பிக்கை, இன்று சாதிக்க வைத்துள்ளது.''எனது கஷ்டங்களை, வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. என் கணவருடன் மீண்டும் சேர வேண்டும்; இத்தனை நாள் வளர்த்த பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும்; என் மகளுக்கு சிறந்த ரோல் மாடலாக இருக்க வேண்டும். ஏதாவது சாதித்தால்தான் அது சாத்தியம் என்ற முடிவுக்கு வந்த நான், அழகி போட்டியில் பங்கேற்க முடிவு செய்து, உழைக்க ஆரம்பித்தேன்,''- உழைப்பின் ருசியை சுவைத்த உற்சாகத்துடன் பேசினார் சந்தியா.''மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் போட்டியில், பங்கேற்று பட்டம் வெல்ல வேண்டும் என, விடாமுயற்சியுடன் பயிற்சி பெற்றேன்; வெற்றி பெற்றேன். எதிர்காலத்தில், என் தம்பியை போன்ற ஊனமுற்றோர், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கென அறக்கட்டளை நிறுவுவதே லட்சியம்,''.அழகு தேவதைகளின் ஆசைகள், நிறைவேற தவறியதில்லை. ஆல் தி பெஸ்ட் சந்தியா!வாழ்வின் கசப்பான கடந்த காலம்தான், இவரை இப்படி சாதிக்க வைத்துள்ளது. எல்லாவற்றையும் துாக்கி போட்டு விட்டு, அழகாக 'கேட்வாக்' செய்த அந்த தன்னம்பிக்கை, இன்று சாதிக்க வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X