பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைக்கு படிப்பு; தாய்க்கு சுயதொழில்: அடடே சொல்ல வைக்கிறது மாநகராட்சி பள்ளி

Added : டிச 01, 2019
Advertisement

''காலை எழுந்து சமையல் முடித்து, கணவரை அலுவலகம் அனுப்பி, குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பி, கடிகாரத்தின் சின்ன முள், ஒன்பதை தொடும்போது தான், பல வீடுகளில் அம்மணிகள் சற்று இளைப்பாற முடியும். மதியம், இரவு என, வேளை தவறாமல் சமைத்து, வீட்டு வேலைகளில் புழுங்கிக் கொண்டிருக்காமல், சீரியலுக்கான நேரத்துக்கு முழுக்கு போட்டு, சுடிதார் தைக்கும் அளவுக்கு முன்னேறி விட்டோம்,'' என்கிறார் பிரியா.வீட்டு வேலைகளில் சுழன்று கொண்டிருந்த பெண்களை ஒருங்கிணைத்து, மாற்றுக்களம் ஏற்படுத்தி தந்துள்ளது, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. பெற்றோரும் இணைந்து கரம் கோர்த்ததன் பலன், தனியார் பள்ளிகளில் படித்தோரை, இப்பள்ளியில் சேர வைத்துள்ளது. ஏனெனில், ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் பயிற்சி, கராத்தே, நடனம் என, மாணவர்களின் தனித்திறன் வளர்க்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, பல்வேறு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பெற்றோரையும் பள்ளி செயல்பாடுகளில், ஈடுபடுத்த கொண்டு வரப்பட்டதே, இலவச தையல் பயிற்சி வகுப்பு. பள்ளியில் ஏற்கனவே இருந்த, இரு தையல் இயந்திரத்தோடு, தன்னார்வலர்களும் உதவியதால், நான்கு இயந்திரங்களில் வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. தையல், எம்ப்ராய்டரிங், கூடை பின்னுதல், ஸ்வெட்டர் தயாரித்தல் என, வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்பு நடத்தப்படுகிறது.கைத்தொழில் தெரிந்திருந்தால் நிமிடத்தையும்,காசாக்கலாம் என்பதால், தன்னார்வலர் வசந்தாமணி ஒத்துழைப்போடு, பயிற்சி அளிக்கப்படுகிறது. பெற்றோரிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால், 'ஷிப்ட்' வாரியாக, தையல் வகுப்பை விரிவாக்குவதோடு, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம் என்ற சுயநலமும் இருப்பதாக கூறுகிறார், பள்ளி தலைமையாசிரியை மைதிலி.பள்ளிகளில் ஆண்டறிக்கை தயாரிக்கும்போது, சமூக பங்களிப்பு குறித்த செயல்பாடுகள் இடம்பெற வேண்டும். நடக்காத கூட்டங்களையும், பெற்றோர் ஆசிரியர் சந்திப்பையும், குறிப்பிடுவதற்கு பதிலாக, இதுபோன்ற ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபட்டு, பள்ளியை தரம் உயர்த்தலாம்,என்கின்றனர் கல்வியாளர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X