சிவகாசியில் மழை சகதியால் மக்கள் தவிப்பு

Added : டிச 01, 2019
Advertisement

சிவகாசி: சிவகாசியில் நேற்று முன்தினம் மாலையிலிருந்து பெய்த மழையால் ரோடுகள் சகதியாக மாற மக்கள் பாதிப்பை சந்தித்தனர்.சிவகாசியில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு திடீரென மழை பெய்தது. அதன்பின் அவ்வப்போது விட்டு விட்டு நேற்று காலை 8: 00மணி வரை பெய்தது. தொடர்ந்து மேக மூட்டமாக இருந்த வந்த நிலையில் பகல் 2:30 மணிக்கு சிறிது நேரம் பெரிதாக மழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்து காற்று வீசியது. ரோட்டில் தண்ணீர் தேங்கி சகதிக்காடாக மாறியது. சேர்மன் சண்முகம் நாடார் ரோடு, பி.எஸ்.ஆர்., ரோடு, பழைய விருதுநகர் ரோடு, மாரியம்மன் கோயில் பகுதி, என்.ஆர்.கே.ஆர்., ரோடு , சாட்சியாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோடு சகதியாக மாறி போக்குவரத்திற்கு இடையூறினை ஏற்படுத்தியது. நகரில் பல்வேறு இடங்களில் குழாய் பதிப்பதற்காக ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. குழாய் பதித்த பின்னர் மீண்டும் பள்ளத்தை முறையாக மூடாததால் சிறிய மழைக்கே ரோடு சகதியாக மாறியது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X