வீடுகள், வீதிகள்தோறும் மரங்கள்: ஊராட்சி செயலாளர்கள் வேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகள், வீதிகள்தோறும் மரங்கள்: ஊராட்சி செயலாளர்கள் வேகம்

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019
Share
விருதுநகர்: விவசாயிகளுக்கு மட்டுமே விவசாயத்திற்கும், மரங்களுக்கும், செடிகளுக்கும், இயற்கைக்கும், பசுமைக்கும் சம்மந்தம் உண்டு. பிற துறையில் பணிபுரிவோர் பலரும் இதற்கும் நமக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் உள்ளனர். அனைத்து துறையில் இருப்பவர்களுக்கும் இயற்கையின் மீது அக்கறை , மரங்களின் அவசியம் குறித்து அறிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதற்கு

விருதுநகர்: விவசாயிகளுக்கு மட்டுமே விவசாயத்திற்கும், மரங்களுக்கும், செடிகளுக்கும், இயற்கைக்கும், பசுமைக்கும் சம்மந்தம் உண்டு.

பிற துறையில் பணிபுரிவோர் பலரும் இதற்கும் நமக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் உள்ளனர். அனைத்து துறையில் இருப்பவர்களுக்கும் இயற்கையின் மீது அக்கறை , மரங்களின் அவசியம் குறித்து அறிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதற்கு விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லத்தில் நடந்த சம்பவமே சாட்சி.விருதுநகர் கடும் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணம் மரங்களின் எண்ணிக்கை குறைவு. புழுதி படர்ந்த விருதுநகரை பசுமையான விருதுநகராக மாற்ற வேண்டுமானால் வீடுகள் , வீதிகள்தோறும் மரங்கள் நட வேண்டும்.

ஆனால் விருதுநகரில் மரம் நட வேண்டும் என்பது எல்லோருக்கும் வெறும் வாய்சொல்லாக இருந்து வருகிறது. யாரும் செயலில் காட்டுவதில்லை.இதிலும் எப்படியாவது விருதுநகரை வளமான நகராக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் சிலரில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி செயலாளர்களும் உள்ளனர்.

ஊராட்சி செயலாளர்களின் எழுச்சி நாள் விழாவில் விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு அங்கு பயிலும் மாணவர்கள் மரக்கன்றுகளை பராமரித்து வளர்க்க உரிய அறிவுரைகளை வழங்கினர்.விரும்ப தகாத மாற்றங்கள்விருதுநகரில் சுற்று சுழல் முக்கியத்துவம் பல ஆண்டுகளாக உணரப்படாமல் உள்ளது. மனித நடவடிக்கைகளினால் சுற்றுச்சுழலில் ஏற்படும் விரும்பத் தகாத மாற்றங்களும் அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளும் மக்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. வீட்டை சுற்றி எங்கு இடம் இருந்தாலும் மரம் நடுங்கள், சுத்தமான காற்றுக்கும் சுற்றுசூழல் பாதுகாப்புக்கும் மரங்களே மூலதனம்.- - - மேனகா, ஊராட்சி செயலாளர், தும்முசின்னம்பட்டி

வாழ்நாள் அதிகரிக்கும்நம் வசிக்கும் இடங்களில் மரங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக நம் வாழ்நாளும் அதிகமாகும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். விருதுநகரில் அதிகமாக மரங்களை நட்டு வளர்த்தால் தான் வருங்கால சந்ததியினருக்கு வளமான வாழ்வை நாம் கொடுக்க முடியும். வீட்டில் மரம் வளர்க்க இடமில்லாதவர்கள் கூட பெயின்ட் டப்பாக்களில், சிமென்ட் சாக்குகளில் காய்கறி, பூச்செடிகளை வளர்க்கலாம்.-- தங்கவேல், ஊராட்சி செயலாளர், சூலக்கரைசுத்தமான காற்றுதேவைக்காக ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக மூன்று மரங்களை நட வேண்டும். ஆனால் யாரும் அதை பின்பற்றுவதில்லை. விருதுநகரில் பசுமை என்பது கனவாகவே உள்ளது. குழந்தைகளிடம் இருந்து மரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நகரின் வளர்ச்சியில் தகுந்த மாற்றம் விரைவில் வரும். நம்மை சுற்றி அதிகமான மரங்கள் இருந்தால் தான் சுத்தமான காற்று கிடைக்கும்.-- பரமேஸ்வரி, கண்காணிப்பாளர், சமூக பாதுகாப்புத்துறை அரசு குழந்தைகள் காப்பகம், விருதுநகர்காலி இடங்களில் மரங்கள்விருதுநகரில் மழையின்மைக்கும் , பசுமையின்மைக்கும் , குடிநீர் பிரச்னைக்கும், சுற்றுச்சூழல் சீரழிவிற்கும் சுற்றி சுற்றி பார்த்தால் மரங்கள் இல்லாதது தான் முக்கிய காரணமாக உள்ளது.இதனால் சுற்றுச்சூழல் பல்வேறு வழிகளில் மாசுபட்டு வருகிறது. மக்களும் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வறண்ட விருதுநகரை வளமான நகராக மாற்ற வேண்டுமானால் காலி இடங்களிலெல்லாம் மரம் வளருங்கள்.-- அல்போன்ஸ், ஊராட்சி செயலாளர், கூரைக்குண்டு

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X