பொது செய்தி

தமிழ்நாடு

சவால்களை சமாளிக்கும் நுட்பம் அவசியம்: பயிர் மேலாண்மை இயக்குனர் கருத்து

Added : டிச 01, 2019
Advertisement
 சவால்களை சமாளிக்கும் நுட்பம் அவசியம்: பயிர் மேலாண்மை இயக்குனர் கருத்து

கோவை:கோவை வேளாண் பல்கலை உழவியல் துறை சார்பில், 'விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்குவதில் தொழில்நுட்பங்களின் பங்கு' என்ற தலைப்பில், விஞ்ஞானிகளுக்கான பயிற்சி முகாம், கோவையில் துவங்கியுள்ளது.பயிர் மேலாண்மை இயக்கக இயக்குனர் கீதாலட்சுமி பேசியதாவது:மத்திய அரசு, 2022-23க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, ஒரு விவசாயியின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 193ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, 2050க்குள் உணவு உற்பத்தியை, 70 சதவீதமாக உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கு, காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசு, மண் வளத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, தண்ணீர் பற்றாக்குறை என, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.கடந்த, 1990 முதல், 2000 வரையிலான ஆண்டு களில் அதிக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்; இதற்கு மூல காரணம் வருமான பற்றாக்குறை என்பதை மறுக்க இயலாது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, வேளாண் துறையில் தொழில்நுட்பங்களின் உதவி அவசியம். விஞ்ஞானிகள் காலநிலை மாற்றங்களை சமாளித்து உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும். இதற்கு, இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.தேசிய அளவில் வேளாண் விஞ்ஞானிகள் இப்பயிற்சியில் பங்கேற்றனர். துவக்க விழாவில், துணைவேந்தர் குமார், உழவியல் துறை தலைவர் சின்னமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X