பொது செய்தி

தமிழ்நாடு

ைஹமாஸ் விளக்கு சீரமைக்கப்படுமா?

Added : டிச 01, 2019
Share
Advertisement
கண்டமங்கலம் : கண்டமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பழுதான ஹைமாஸ் விளக்கை சீரமைக்க வேண்டும். விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலக பஸ் நிறுத்தம் அருகில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ைஹமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.இந்த ைஹமாஸ் விளக்கு ஒரே வருடத்தில் பழுதானது. இது குறித்து தினமலரில் செய்தி வெளியானதை தொடர்ந்து, பழுது நீக்கப்பட்டு மீண்டும்

கண்டமங்கலம் : கண்டமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பழுதான ஹைமாஸ் விளக்கை சீரமைக்க வேண்டும்.

விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலக பஸ் நிறுத்தம் அருகில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ைஹமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.இந்த ைஹமாஸ் விளக்கு ஒரே வருடத்தில் பழுதானது. இது குறித்து தினமலரில் செய்தி வெளியானதை தொடர்ந்து, பழுது நீக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.இந்நிலையில், ைஹமாஸ் விளக்கு, கடந்த 2017ல் மீண்டும் பழுதானது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், கண்டமங்கலம் பஸ் நிறுத்தம் இரவு நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருண்டு கிடந்தது.

அப்போதைய கண்டமங்கலம் பி.டி.ஓ., ஜெகதீசன் பழுதான ைஹமாஸ் விளக்கு கம்பத்தையே, அடியோடு கழற்றி வைத்துவிட்டார். ஆனால், இதுவரை அமைக்கவில்லை.தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வந்து செல்லும் பஸ் நிறுத்தத்தில் ைஹமாஸ் விளக்கை மீண்டும் அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X