எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வாரிய மின்சாரம், சூரியசக்தி பயன்பாடு கணக்கிட ஒருங்கிணைந்த மீட்டர்

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Advertisement
வாரிய மின்சாரம், சூரியசக்தி பயன்பாடு ,கணக்கிட, ஒருங்கிணைந்த மீட்டர்

முதல் முறையாக வீடு உள்ளிட்ட இணைப்புகளில் சொந்த மற்றும் சூரியசக்தி மின் பயன்பாட்டை கணக்கெடுக்க ஒருங்கிணைந்த மீட்டரை பொருத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வீடு உள்ளிட்ட அனைத்து பிரிவுக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை அரசு நிறுவனமான மின் வாரியம் தான் மேற்கொள்கிறது. மின் பயன்பாட்டை கணக்கெடுக்க 'ஸ்டேடிக் மீட்டர்' பொருத்தப்படுகிறது. அதில் தேதி நேரம் மின் பயன்பாடு உச்ச மின் தேவை ஏற்பட்ட நேரம் உள்ளிட்டவை பதிவாகின்றன.

பலர் தங்கள் கட்டடங்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்கின்றனர். அந்த இணைப்புகளில் 'நெட் மீட்டர்' பொருத்தப்படுகிறது. அதில் கட்டட உரிமையாளர் மின் வாரியத்திற்கு வழங்கிய சூரியசக்தி மின்சார அளவு; அவர் பயன்படுத்திய மின் வாரியத்தின் மின்சார அளவு பதிவாகும்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது ஸ்டேடிக் நெட் மீட்டர்கள் தனித்தனியாக வாங்கப்படுகின்றன. சாதாரண இணைப்புகளில் ஸ்டேடிக் மீட்டரும்; சூரியசக்தி மின் நிலையம் உள்ள கட்டடங்களில் நெட் மீட்டரும் பொருத்தப்படும். ஸ்டேடிக் மீட்டர் உள்ள கட்டடங்களில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்தால் அந்த மீட்டரை எடுத்து விட்டு நெட் மீட்டர் பொருத்தப்படும்.

தற்போது இரு பயன்பாடுகளும் ஒரே மீட்டரில் பதிவாகும் வகையில் ஒருங்கிணைந்த மீட்டர் பொருத்தப்பட உள்ளது. இதற்காக தற்போது அந்த தொழில்நுட்பம் உள்ள 30 லட்சம் ஒருமுனை இணைப்புக்கான மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன. அந்த மீட்டரை சூரியசக்தி மின் நிலையம் உள்ள மற்றும் அமைக்காத கட்டடங்களில் பொருத்தி அதே மீட்டர் வாயிலாக இரு வகை மின் பயன்பாட்டையும் கணக்கு எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivakumar - chennai,இந்தியா
01-டிச-201908:38:26 IST Report Abuse
sivakumar பதிவு செய்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் நெட்மீட்டர் வரவில்லை. அதிகாரிகள் அலட்சியம், ஆட்சியாளர்கள் செல்வாக்கால். . . . சாமானியன் கேள்வி கேட்க இயலாத நிலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X