சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் பிரச்னை: டிரைவர் தற்கொலை

Added : டிச 01, 2019
Advertisement

பண்ருட்டி : கடன் பிரச்னை காரணமாக, விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த சீரங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் கலையரசன்,33; மினி லாரி டிரைவர்; இவரது மனைவி மாலதி ; இவர்களுக்கு ேஹமஸ்ரீ என்கிற மகளும் பாலமுருகன் என்கிற மகனும் உள்ளனர். இவர் பைனான்ஸ் மூலம் மினி லாரி வாங்கியிருந்தார்.இதற்கான கடனை செலுத்த முடியாததால், கடந்த மாதம் மினி லாரியை பைனான்ஸ் கம்பெனியில் ஒப்படைத்தார்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், மீண்டும் கடன் வழங்குகிறோம் என கூறிய பைனான்ஸ் நிறுவனம் மினி லாரியை, கலையரசனிடம் ஒப்படைத்தது.

இதற்காக வீட்டை அடமானம் வைத்து ரூ.90 ஆயிரம் பணம் செலுத்தினார். பின் மறு லோன் உங்கள் பெயரில் போட இயலாது. வேறு நபர்கள் பெயரில் தான் போடமுடியும் என பைனான்ஸ் நிறுவத்தினர் நேற்று முன்தினம் கூறினர். இதனையடுத்து வீடு திரும்பிய கலையரசன் நேற்று முன்தினம் இரவு, சீரங்குப்பம் ஓ.என்.ஜி.சி., நிலத்தில் விஷம் குடித்து மயங்கினார்.கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் நேற்று காலை இறந்தார்.இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X