சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகம் முற்றுகை

Added : டிச 01, 2019
Advertisement

சிறுபாக்கம் : சாலையை சீரமைக்காத ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து, ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

சிறுபாக்கம் அடுத்த மங்களூர் ஊராட்சியில், குளத்து மேடு தெரு - காலனி சாலை, போயர் தெரு சாலை, பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.அப்பகுதி மக்கள் ஒன்றிய அலுவலர்களிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக நடந்து செல்ல முடியாத அளவிற்கு மோசமடைந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். யாரும் பேச்சு வார்த்தைக்கு வராததால், கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X