பொது செய்தி

தமிழ்நாடு

உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி

Added : டிச 01, 2019
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே, வி.சாலையில் அமைந்துள்ள இ.எஸ்., செவிலியர் கல்லுாரியில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடந்தது. துணை பேராசிரியர் கார்த்தி, 'சமுதாயத்தில் எய்ட்ஸ் நோயின் மாற்றம்' தலைப்பில் உலக மற்றும் இந்திய அளவில் எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்களின் விழுக்காடுகள் பற்றி கூறினார். மாவட்ட நோடல் அதிகாரி ராஜ்குமார், மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு,

விழுப்புரம் : விழுப்புரம் அருகே, வி.சாலையில் அமைந்துள்ள இ.எஸ்., செவிலியர் கல்லுாரியில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடந்தது.

துணை பேராசிரியர் கார்த்தி, 'சமுதாயத்தில் எய்ட்ஸ் நோயின் மாற்றம்' தலைப்பில் உலக மற்றும் இந்திய அளவில் எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்களின் விழுக்காடுகள் பற்றி கூறினார். மாவட்ட நோடல் அதிகாரி ராஜ்குமார், மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு, சமுதாயத்தில் மாணவர்களின் பங்களிப்பு, விழுப்புரம் மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதிப்பின் விழுக்காடு மற்றும் மருத்துவத்துறை அங்கத்தினர்கள் அதிகமாக பாதித்தல், செவிலியர்கள் தங்களை பாதுகாப்பது பற்றி கூறினார்.

பேராசிரியர் பொற்செல்வி, நோய் தற்காப்பு முறைகள் பற்றி கூறினார்.எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நோயற்ற மனிதர்கள் கூட தொற்று ஊசி, பச்சைகுத்துதல் மூலம் பாதித்தல், நோயால் பாதித்தோரை அரவணைக்கும் முறைகள் பற்றி குறும்படம் மூலம் பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு செவிலிய மாணவிகள் வெளிப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X