சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு

Added : டிச 01, 2019
Advertisement

செஞ்சி : வடதரம் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செஞ்சி தாலுகா, கீழ்மாம்பட்டு ஊராட்சி, வடதரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த வாரம் கிராம பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.நேற்று முன்தினம் இரவு கடையின் பூட்டை உடைத்து 7 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.தகவல் அறிந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் சுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X