போலி நகை அடகு: கேரள போலீசார் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி நகை அடகு: கேரள போலீசார் விசாரணை

Added : டிச 01, 2019

தேனி: தேனி வங்கிகளில் போலி நகை அடகு வைத்து மோசடி செய்தவர்கள் கேரளாவிலும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக அம்மாநில போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.தேனி வங்கிகளில் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்ததாக தேனி கற்பகச்செல்வி 49, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த உமாதேவி 46 , அவருக்கு போலி நகைகளை செய்து தந்த திண்டுக்கல்லை சேர்ந்த நகை வியாபாரி ராமச்சந்திரன் 40, ஆகிய மூவரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நிபந்தனை ஜாமினில் வந்த உமாதேவி தலைமறைவாகிவிட்டார்.கேரளாவிலும் மோசடிஇந்நிலையில் திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வங்கி நகை அடகு வைத்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் தரப்பட்டுள்ளது. அதில் கைது செய்யப்பட்டவர்கள் உமாதேவி குறித்து கூறியுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள 21 பொதுத்துறை, தனியார் வங்கிகளில் 500 பவுன் நகைகள் , போலி நகைகளாக அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதனால் திருவனந்தபுரம் எஸ்.ஐ., சஜ்ஜூ, ஏட்டு பிரதீப், போலீஸ்காரர் வருண் ஆகியோர், தேனி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இங்குள்ள வழக்கு தொடர்பாக விபரங்கள் பெற்றுச் சென்றுள்ளனர். நாளை(டிச., 2ல்) தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உமாதேவி, ராமச்சந்திரன், கற்பகச்செல்வி ஆகியோரை கேரளாவில் உள்ள வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்ய உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X