சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாழ்வான பகுதி மக்களின் பாதுகாப்பு

Added : டிச 01, 2019
Advertisement

கடலுார் : கடலுார் கே.என்.பேட்டையில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள், பாதுகாப்பு கருதி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முடங்கியது.தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மீட்டு பாதுகாப்பாக அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்க, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கடலுார், கே.என்.பேட்டை பெரியார் நகர், புதுநகர், மணி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மக்கள், கே.என்.பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மாலை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு டீ, பிஸ்கெட், உணவு வழங்கப்பட்டது. முகாமை சப் கலெக்டர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் செல்வகுமார் ஆய்வு செய்தனர். தங்கியுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதிகளை தடையின்றி வழங்குமாறு அதிகாரிகளுக்கு சப் கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X