சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மோதி குழந்தை பலி கிராம மக்கள் சாலை மறியல்

Added : டிச 01, 2019
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசு பஸ் மோதி மூன்று வயது பெண் குழந்தை தாய் கண் முன்னே பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகேவுள்ள கெங்கராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் பிரசாந்த், 32; கூலி தொழிலாளி. இவரது மனைவி பூவாத்தாள். இவர்களுக்கு தனுஸ்ரீ,3; என்ற பெண் குழந்தை உள்ளது.நேற்று மாலை 6.35 மணிக்கு பூவாத்தாள் தனது மகளை அழைத்து கொண்டு, கெங்கராம்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சாலையோரமாக அழைத்து சென்றார்.அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென தனுஸ்ரீ மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த குழந்தை தாய் கண்முன்னே பரிதாபமாக இறந்தது.இதையறிந்த அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து, கெங்கராம்பாளையம் பகுதியில் பலமுறை சாலை விபத்துகள் நடப்பதாகவும், விபத்தை தவிர்க்க அங்கு வேகத்தடை அமைக்க கோரி் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த, வளவனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில், இரவு 7.15 மணிக்கு மக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.இந்த சம்பவத்தால் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X