பொது செய்தி

தமிழ்நாடு

சொத்துவரி விதிப்பில் தேனி அல்லிநகரம் முன்னாள் கமிஷனர் முறைகேடு

Added : டிச 01, 2019
Advertisement

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியின் முன்னாள் கமிஷனர் ராஜாராம் சொத்துவரி விதிப்பு முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து, மாநில நகராட்சி நிர்வாக ஆணையம் விசாரித்து, அதன் அறிக்கையை 12 வாரங்களில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமர்பிக்க வேண்டும்.'' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சி நேருஜி ரோட்டில் உள்ள 10 செண்ட் இடம் கூட்டுக் குடும்ப சொத்தாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தை வருவாய் ஆவணம் எதுவும் இன்றி வி.எஸ்.சந்தீப் என்ற பெயரில், சொத்துவரி விதித்து, ரசீதை (2015 ஜன.,5ல்) முறைகேடாக கமிஷனர் ராஜாராம் வழங்கியுள்ளார். இதனால் கூட்டுக்குடும்பம் மூலம் சொத்தை பராமரிக்கும், குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கமிஷனர் ராஜாராமிடம் எழுத்துப் பூர்வமாகவும், நேரிலும் கூட்டுக் குடும்பத்தினர் முறையிட்டும் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. இதனால் கூட்டுக் குடும்பத்தினர் சார்பில், ஈஸ்வரன் என்ற பெயரில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், கமிஷனர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுமீதான விசாரணை முடிந்து, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கடந்த நவ., 13ல் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதில், இடத்தின் உரிமையாளருக்கு பதில், மாற்று நபருக்கு சொத்துவரி ரசீது நகராட்சி கமிஷனர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் முறைகேடு நடந்துள்ளது. இதனால் மாநில நகராட்சி நிர்வாக ஆணையம் 12 வாரங்களில் விசாரித்து, அதன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.'' என, உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X