பொது செய்தி

தமிழ்நாடு

'பெண்களும் மது அருந்தினால் மரியாதையை இழக்க நேரிடும்!'

Added : டிச 01, 2019
Advertisement

சென்னை:''பெண்கள் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் என்றே, சில கருத்துகளை கூறினேன். ஆண்களை போல, பெண்களும் மது அருந்தினால், மரியாதையை இழக்க நேரும். பெண்களுக்கு, நான் மதிப்பு கொடுப்பவன்,'' என, நடிகர் பாக்யராஜ் கூறினார்.

கருத்துக்களை பதிவு செய் பட விழாவில் பங்கேற்ற பாக்யராஜ், 'பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், ஆண்களை மட்டுமே குறை சொல்லக் கூடாது. 'இவ்விஷயத்தில், பெண்களும் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஊசி இடம் கொடுக்காமல், நுால் நுழையாது' என, பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக, ஆந்திர மாநில மகளிர் ஆணையம் சார்பில் புகார் தரப்பட்டு, தமிழக மகளிர் ஆணையத்தில் இருந்து, பாக்யராஜுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், பாக்யராஜ் அளித்துள்ள பேட்டி:பொள்ளாச்சி சம்பவத்தில், பெண்கள் கதறுவதை பார்த்து, ஒரு தந்தையாக, நான் பதறினேன். அன்று இரவு, எனக்கு துாக்கமே வரவில்லை. பெண்கள் ஏன், இந்தளவு இடம் கொடுத்தனர்; எச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்று நினைத்து தான், சில கருத்துகளை வெளியிட்டேன். மற்றபடி, நான் எப்போதுமே, பெண்களுக்கு மதிப்பு கொடுப்பவன்.எம்.ஜி.ஆரை போல, அனைத்து தாய்க்குலங்களையும் மதித்து வருகிறேன்.

என் படங்களில் கூட, பெண்களை போற்றியுள்ளேன். அவர்களை தவறாக காட்டியதே இல்லை. என் பேச்சில், எந்த உள்நோக்கமும் இல்லை.என் பேச்சுக்கு விமர்சனங்கள் இருந்தாலும், சரியான கருத்தை சொன்னதாகவே, பலர் எண்ணி உள்ளனர். வேலையில், ஆண்களுடன் பெண்கள் போட்டி போடலாம்; கல்பனா சாவ்லா போல், விண்வெளியில் பறக்க முடியும். ஆனால், ஆண்களை போல் மது அருந்தினால், மரியாதையை இழக்க நேரும்.பெண்களுக்கு தேவையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மனைவியை தவிர, மற்றவர்களை தாயாகவும், சகோதரியாகவும் மதிக்கும்படி தான், நம் கலாசாரம் கற்றுக் கொடுத்துள்ளது.பெண்கள் நெருப்பு போல் இருந்து, தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X