உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை தாசில்தார் உட்பட 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாசில்தார் வேல்முருகன், புதியதாக உருவாக்கப்பட்ட திருவெண்ணநல்லூர் தாலுகாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி தேர்தல் பிரிவு தாசில்தார் காதர்அலி, உளுந்துார்பேட்டைக்கும், கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் (கலால்) சற்குணம், உளுந்துார்பேட்டை ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும், கள்ளகுறிச்சி தனி தாசில்தார் ராஜராஜன், கள்ளக்குறிச்சி கலால் கோட்ட அலுவலராகவும், கல்வராயன்மலை தனி தாசில்தார் நடராஜன், கல்வராயன்மலை வருவாய் தாசில்தாராகவும் நியமித்து கலெக்டர் கிரண்குரலா உத்தரவிட்டுள்ளார்.