சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூணாறில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு

Added : டிச 01, 2019
Advertisement

மூணாறு: மூணாறில் விதிமுறைகள் மீறியதாக சுற்றுலா வாகன உரிமையாளர்கள் பத்து பேர் மீது மோட்டார் வாகனத்துறையினர் வழக்கு பதிவு செய் தனர்.மூணாறில் மோட்டார் வாகனத்துறை ஆய்வாளர் முஜீப் தலைமையில் நேற்று வாகன சோதனை நடந்தது. அதில் மூணாறு- அடிமாலி இடையே இயக்கப்படும் தனியார் பஸ், கடந்த ஆறு மாதமாக வரி செலுத்தாமல் ரூ.56 ஆயிரம் நிலுவையில் உள்ளது கண்டறியப்பட் டது. பஸ்சை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.அதேபோல் விதிமுறைகள் மீறி அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் மற்றும் மியூசிக் சிஸ்டம், லேசர் விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்ட 10 சுற்றுலா வாகனங்கள் சிக்கின. அவற்றின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். வரும் நாட்களிலும் வாகன சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.--------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X