திருக்கனுார் : அம்பட்டன் குளம் இருளர் குடியிருப்பினை ஆய்வு செய்தசப் கலெக்டர்ஷஸ்வத் சவுரப், குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட்டார்.மண்ணாடிப்பட்டு கொம்யூன்மயிலம் பாதையில் உள்ள அம்பட்டன் குளம் பகுதியில் இருந்து வரும் இருளர் குடியிருப்பு பகுதியில் சப் கலெக்டர்ஷஸ்வத் சவுரப்,கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது இருளர்கள்,இட நெருக்கடியில்30 வீடுகளில் 150 நபர்கள் வசித்து வருகிறோம். இவற்றில் 14 குடும்பங்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இப்பகுதியில் பஸ் வசதி , மருத்துவ வசதிஇல்லை. இதற்காக வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளது. மனைப்பட்டா வழங்கி அரசே வீடுகள் கட்டித் தர வேண்டும் எனவலியுறுத்தினர்.
இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறும், ஒரு வாரத்திற்குள் சாதி சான்றிதழ்கள்வழங்கிட தாசில்தார்களுக்கும், இருளர் குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட ஆணையருக்கும் சப் கலெக்டர்ஷஸ்வத் சவுரப் உத்தரவிட்டார். அப்பகுதியில் இயங்கி வரும் தனியார்இரும்பு தொழிற்சாலையின் கழிவு பொருட்கள் மூலம் ஏரியின் நடுவே பாதை அமைக்கப்பட்டு இருந்ததை பார்வையிட்ட சப் கலெக்டர் ஷஸ்வத் சவுரப், அதனை உடனடியாகஅகற்ற உத்தரவிட்டார்.
பிறகு அங்கிருந்து காட்டேரிக்குப்பம் பஸ்டாண்ட் சந்திப்புபகுதியில் பார்வையிட்ட சப் கலெக்டர்அங்கு சங்கராபரணி வாய்க்காலில் அடைபட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும், கடைகளால் கொட்டப்பட்டுள்ள குப்பைகளையும் அகற்றிட உத்தரவிட்டார். ஆய்வின்போது தாசில்தார் மகாதேவன் உடனிருந்தார்.