பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Added : டிச 01, 2019
Advertisement

விழுப்புரம் : பருவமழை, புயல் மற்றும் வெள்ள காலங்களில் மக்களுக்கு, எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின் செயற்பொறியாளர் கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கண்டமங்கலம் மின் செயற்பொறியாளர் கோட்டையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:காற்று மற்றும் மழைகாலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகேபொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்.மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதனருகே செல்வதோ, தொட முயற்சிப்பதோ கூடாது.இது குறித்து, அருகேவுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு, மின்வாரிய அலுவலர்கள் வரும்வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள்.கான்கிரீட் கூரையிலான கட்டடங்களில் தஞ்சம் அடையுங்கள். பாதுகாப்பான கட்டடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சம் அடையுங்கள்.இடி, மின்னலின் போது, 'டி.வி.,' மிக்சி, கிரைண்டர், கணினி, மொபைல் மற்றும் தொலைபேசியை பயன்படுத்த கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகே நிற்ககூடாது.

மின் மாற்றிகள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது, அதனருகே செல்லக்கூடாது. அது பற்றி அருகேவுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மழையின் போது, வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியில், மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.மேல்நிலை மின்கம்பிகளுக்கு, அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்ட, மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X