இந்தியா

ரூ.1,000 வழங்காவிட்டால் போராட்டம்

Added : டிச 01, 2019
Advertisement

புதுச்சேரி : பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்டபடி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவது என, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம், ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ஐ.என்.டி.யூ.சி., ஞானசேகரன், தமிழ்ச்செல்வம், ஏ.ஐ.டி.யூ.சி., அபிேஷகம், தினேஷ் பொன்னையா, சேது செல்வம், சி.ஐ.டி.யூ., சீனுவாசன்,ஏ.டி.யூ., பாப்புசாமி, என்.ஆர்.டி.யூ.சி., அன்பழகன், முருகன், ஏ.ஐ.சி.சி.டி.யூ., புருேஷாத்தமன், முருகன், எல்.எல்.எப்., செந்தில், புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 500 ரூபாய் தீபாவளி பரிசு கூப்பன் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பின், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:அமைப்பு சாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 27ம் தேதியன்று கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அமைச்சர், தொழில் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும், ஜனவரி 10ம் தேதிக்குள் நல வாரியம் அமைக்கப்படும் என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையில் அரசு தரப்பு ஏற்றுக் கொண்டதற்கு மாறாக, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளதை, அனைத்து தொழிற்சங்கங்களும் வன்மையாக கண்டிக்கிறோம். இது, சரியான போக்கு அல்ல. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தீபாவளி கால பரிசுத் தொகையை குறைத்திருப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, ஏற்றுக் கொண்ட அடிப்படையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்தாண்டு உடனடியாக 1,000 ரூபாய் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் கடுமையான போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X