சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 01, 2019
Advertisement
 சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம் : செஞ்சி ரோட்டில் இருந்த புளிய மரம் நேற்று பெய்த கனமழையில் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டிவனம்-செஞ்சி ரோட்டில் சாலையோரம் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. நேற்று பெய்த கன மழையில், செஞ்சி ரோட்டில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் எதிரே இருந்த பழமையான புளிய மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தகவலறிந்த திண்டிவனம் மின்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புளிய மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X