பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய குங்பூ போட்டி  போடி மாணவர்கள் சாதனை

Added : டிச 01, 2019
Advertisement

போடி: தேசிய அளவில் ஓசூரில் நடந்த குங்பூ சாம்பியனுக்கான போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.தேசிய அளவில் ஓசூரில் நடந்த குங்பூ போட்டியில் சீனியர் பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாலகார்த்திக் முதலிடமும், ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய்ராஜ் இரண்டாம் இடமும், சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரதீப் மூன்றாம் இடமும் பெற்றனர்.* ஜூனியர் பிரிவில், போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரவீன் முதலிடமும், இண்டர்நேசனல் மெட்ரிக் பள்ளி மாணவர் அபிரவு ஸ்ரீராம் இரண்டாம் இடமும், தேனி வேலம்மாள் சிபிஎஸ்இ., பள்ளி மாணவர் ராஜபிரைசூடன் மூன்றாம் இடமும் பெற்றனர்.* சப்-ஜூனியருக்கான போட்டியில் ,போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் கிருபாகர் முதலிடமும், ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜீவா ஹரிஹரன் இரண்டாம் இடமும், போடி ஸ்பைஸ் வேலி பப்ளிக் பள்ளி மாணவர் யாதேஷ்குமார் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்கள், வி.என்.பி., அகடாமியை சேர்ந்த மாஸ்டர்கள் மோனீஸ்வரை தேனி மாவட்ட குங்பூ அசோசியேசன் தலைவர் குமார், கவுரவ தலைவர் ஜமீன்தார் வடமலை ராஜய பாண்டியன், மாஸ்டர்கள் நீலமேகம், சொக்கர் மீனா, வாஞ்சிநாதன், ஜெயசீலன் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X