இந்தியா

அரிக்கமேட்டில் மீண்டும் அகழாய்வு எம்.பி.,யிடம் கோரிக்கை மனு

Added : டிச 01, 2019
Advertisement

புதுச்சேரி : 'அரிக்கமேட்டில் மீண்டும் அகழாய்வுப் பணிகளை துவக்க வேண்டும்' என, வைத்திலிங்கம் எம்.பி.,யிடம், கலை இலக்கியப் பெருமன்ற நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

பெருமன்ற் தலைவர் எல்லை சிவக்குமார், பொதுச் செயலர் பாலகங்காதரன் ஆகியோர், வைத்திலிங்கம் எம்.பி.,யை சந்தித்து மனு அளித்தனர். பெருமன்றத்தின் தமிழ் மாநில செயலர் மூர்த்தி ராதாகிருஷ்ணன், செயலர்கள் அன்புச்செல்வன், மணிகண்டன், ஓவியர் முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லுார், கொடுமணல், சிவகளை ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசின் தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.

அதுபோல, புதுச்சேரியில் உள்ள அரிக்கமேட்டில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதியையும், நிதியுதவியையும் வழங்குவதற்கு தொல்லியல் துறையை வலியுறுத்த வேண்டும்.அரிக்கமேட்டை சரியாக பராமரிக்கவும், மண் திருட்டு போன்ற செயல்களை தடுக்கவும், சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து, 24 மணி நேரமும் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.தொல்லியல் துறை மூலமாக அரிக்கமேட்டில் அருங்காட்சியகம் அமைத்து, ஏற்கனவே அகழாய்வு மூலமாக கிடைத்த பொருட்கள், அவற்றின் வரலாற்றுக் குறிப்புகள், அகழாய்வு செய்த இடங்களின் போட்டோக்கள் ஆகியவற்றை பார்வைக்கு வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

புதுச்சேரி கடற்கரையில் இருந்து, அரிக்கமேடு வரையில், நீண்டதொரு நவீன அகழாய்வு மேற்கொள்வதன் மூலமாக கடற்கரையில் புதையுண்ட நகரங்கள், வாணிப மையங்கள், கட்டடங்களைக் கண்டறிய முடியும். இதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்.பாகூர் சிவன் கோவில், திருவாண்டார்கோவில் திருமால் கோவில், சிவன் கோவில், மதகடிப்பட்டில் உள்ள குண்டாங்குழி மகாதேவர் கோவில் போன்ற பழமையான கோவில்களில் தொல்பொருள் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள் மேற்கொள்ள தொல்லியல் துறையை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X