காரைக்கால் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று இரவு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை, மாவட்ட நிர்வாகம் சார்பில் துணை கலெக்டர் ஆதாஷ், கோவில் நிர்வாகம் சார்பில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான், கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் ஆகியோர் வரவேற்றனர்.தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தர்பாரண்யேஸ்வரர், முருகர், விநாயகர், அம்பாள், நடராஜர் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
பின்னர் சனீஸ்வரர் சன்னதியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் எள் தீபம் ஏற்றி சிறப்பு பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார்.